ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று 14 நகரங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் இன்று நேற்று நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளனர்.இது பற்றி கர்னல் சோபியா குர்ஷி கூறியதாவது,

“பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.

மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

“பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது.

“பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து, பாகிஸ்தான் இன்று அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பியது.

மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தான் போர் விமானங்களில் நீண்ட தூரம் தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறினார்.