
தொகுப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் மேலும் உயர்ந்தது.
அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஜம்மு காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டு இருக்கும் இந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் மனிதத்துக்கும் அமைதிக்கும் ஒரு பெரிடியாகும்.
ஆண்டுதோறும் இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பஹல்காம் காஷ்மீரின் இதயம் போன்றது. அமரன் படபிடிப்பின் போது பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டது.
அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டனர். தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.