
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் வெளியாவதற்கு முன்னாடி எல்லாரும் கைதி படத்தை ஒரு தடவை பார்த்துட்டு போங்க அப்படின்ற மாதிரி லோகேஷ் சொல்லிருப்பாரு. அதே மாதிரி லியோ படம் பார்க்க போறதுக்கு முன்னாடி கைதி விக்ரம் இரண்டு படத்தையும் ஒரு தடவை பார்த்துக்கோங்க-ன்ற மாதிரி பேசப்பட்டது. இப்போ கோட் படம் ரிலீஸ் ஆன நிலையில், லோகேஷ் அவர்களுடைய இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு GOAT திரைப்படம் பார்ப்பதற்கு முன்னாடி நீங்க யாரும் எந்த படமும் பார்க்க வேண்டாம் என்பது போல்,
நக்கலா தன்னோட எக்ஸ் தள பக்கத்துல அவர் போஸ்ட் ஒன்று பதிவிட, இதை பார்த்த லியோ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த ரத்தினகுமார் மார்க் ஆண்டனி படத்தில் வரக்கூடிய ஒரு வசனத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் பஸ்ல நானும் தாண்டா இருக்கேன். பாம் போட்டுறாதீங்கடா . அதுதான் அந்த வசனம். இதோட அர்த்தம் என்னவென்றால், லியோ படத்தில் நானும் உதவி இயக்குனராக வேலை பார்த்து இருக்கிறேன். அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு பேசுங்க அப்படிங்கற மாதிரி நக்கலா சிரிக்கும்படி மறு பதில் கொடுத்து இருக்கிறார்.