
பொதுவாகவே கோடை காலங்களில் மக்கள் பலரும் அதிக அளவு பழங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் சிலர் ரசாயனங்களை அதிக அளவு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் தீங்கு விளைவிக்கும் அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. இவை தலைச்சுற்றல், எரிச்சல், பலவீனம், விழுங்குவதில் சிரமம், வாந்தி மற்றும் தோல் புண்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் கால்சியம் கார்பைடு பயன்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.