நாட்டில் பல வருடங்களாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவான அளவில் புழக்கத்தில் இருப்பதாக கருதி சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதோடு 2000 ரூபாய்களை கையில் வைத்திருந்தால் பொதுமக்கள் அதனை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என கூறி செப்டம்பர் வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.

இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி. பழைய 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டுமே சட்டப்படி செல்லுபடி ஆகும். ஒருவேளை பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுகளை தங்கள் கைவசம் வைத்திருந்தால் காலக்கெடு மற்றும் கட்டணம் எதுவும் இன்றி வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 100 ரூபாய் நோட்டுகள் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.