தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் விடுதியில் தூய்மை இல்லாமல் இருப்பதால் தான் இப்படி நடந்துள்ளதாக கூறி  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தியேறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.