
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலக இருக்கிறார். அதன் பிறகு முழுநேர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கும் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இருமுறை தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு தொகுதி வாரியாக சால்வை அணிவித்து பாராட்டியதோடு உதவித்தொகையும் வழங்கினார்.
நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை வழங்கியது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். சமீபத்தில் மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து கொடுத்ததோடு அவர்களை நேரில் அழைத்து கௌரவப்படுத்தி பரிசு வழங்கினார். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு வரும்போது உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியதோடு அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ் ஈழத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் நடிகர் விஜய் கல்வி உதவி தொகை வழங்கியது தொடர்பாக பூரித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தியதோடு கல்வி உதவி தொகையும் வழங்கினார்.
எங்கள் நாட்டிலையும் ஒரு நடிகர் இப்படி செய்திருந்தால் நாங்களும் மிகவும் மகிழ்ந்திருப்போம். மேலும் நடிகர் விஜய் இப்படி கல்வி உதவித்தொகை வழங்கியதால் இந்தியா முழுவதும் அவர் உயர்ந்து நிற்கிறார். இப்படி மாணவ மாணவிகளை அழைத்து கல்வி உதவித்தொகை வழங்கி உயர்ந்து நிற்கக்கூடிய ஒருவர் என்றால் அது எங்கள் தளபதி தான் என்று அந்த சிறுமி மிகவும் பூரித்து பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் ஈழம் சிறுமி @tvkvijayhq அண்ணன் பள்ளி மாணவர்களுக்கு செய்யும் உதவியை பற்றி சொன்ன வார்த்தைகள் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥 pic.twitter.com/RmBx81QZPY
— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) November 29, 2024