அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தானது பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாழையப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பள்ளி பேருந்து ஓட்டுனர், 10 குழந்தைகள் உள்பட 11 படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து திருமாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.