நம் நாட்டில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காம கொடூரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவங்களில் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நான்காம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 57 வயதுடைய முதியவர் ஒருவர் அந்த சிறுமியை ஏமாற்றி வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி முடிந்து தாமதமாக வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.