
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 11 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை உறவுக்கார வாலிபரான 22 வயது நபர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுமியை வாலிபர் கழிவறைக்குள் இழுத்துச் சென்று கைகால்களை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் பிடிபட்டார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறுமியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இது அந்த பகுதியில் ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது பாலியல் வன்கொடுமை. கடந்த 16ஆம் தேதி கோலந்தரா மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தனர். அதற்கு முன்னதாக ஜூன் 15ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார். மேலும் இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் அந்த மாநில மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.