கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்குள் ஒரு கிரிக்கெட் பந்து நுழைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சம்பவ நாளில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் ராமப்பா பூஜாரி என்பவர் இருந்துள்ளார். இவரின் அறைக்குள் தற்செயலாக ஒரு கிரிக்கெட் பந்து விழுந்த நிலையில் பந்தை வீசிய வாலிபரை ஆசிரியர் திட்டினார். அந்த ஆசிரியர் கடுமையாக திட்டியதால் பவன்ஜாதவ் என்ற அந்த 21 வயது வாலிபர் கோபத்தில் ஒரு பீர் பாட்டிலை உடைத்து ஆசிரியரின் தலையில் அடித்தார்.

அதாவது அந்த ஆசிரியர் திட்டியதை மனதில் வைத்துக்கொண்ட வாலிபர் சம்பவ நாளில் பட்ட பகலில் பள்ளிக்குள் நுழைந்து ஒரு பீர் பாட்டிலால் அவரின் மண்டையை அடித்து உடைத்த நிலையில் அவருக்கு ரத்தம் வந்தது. அந்த ஆசிரியர் பலத்த காயங்களுடன் வாலிபரை பிடிக்க முயன்ற நிலையில் அவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் கடந்த 13ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.