
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவியின் தர மற்றும் அளவை உறுதி செய்ய தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக சத்துணவு குறித்த தகவல்கள் குறும் செய்தியாக தினம் தோறும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஏ எம் எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினம் தோறும் காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.