பிரபல பெல்ஜியன் நடிகை எமிலி டெக்யூன் (Emilie Dequenne) கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பாரிஸின் புறநகரில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. அதிரெனல் சுரப்பியில் ஏற்படும் அரிதான புற்றுநோய் (Adrenocortical Carcinoma) காரணமாக 2023 அக்டோபரில் அவர் சிகிச்சை குறித்து  தனது மருத்துவ நிலையை வெளியிட்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு, டார்டென் சகோதரர்கள் இயக்கிய ‘Rosetta’ திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்ததன் மூலம் புகழைப் பெற்றார். அந்த படம் கேன்னஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) ‘Golden Palm’ விருதைப் பெற்றதோடு, அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது. பின்னர், ‘The Girl on the Train’ (2009) மற்றும் ‘Our Children’ (2012) போன்ற பல பிரஞ்சு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்றார்.

2023ஆம் ஆண்டு கேன்னஸ் திருவிழாவில் தனது வெற்றியின் 25வது ஆண்டை கொண்டாட வந்திருந்தார். 2024ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமான ‘Survive’ அவரது கடைசி படமாக அமைந்தது. அவரின் கணவர் மிச்சல் பெராச்சி (Michel Ferracci) மற்றும் மகள் மில்லா சவரேசே (Milla Savarese) அவரை இழந்து துயரமடைந்துள்ளனர். இவருடைய மறைவிற்கு  ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ·