
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர். விஷால், துணைத் தலைவர் கருணாஸ், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான பிரச்சனைகள் பற்றி பொதுக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது.
கேரள சினிமாவை பொருத்தவரை ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விசாக கமிட்டி அமைக்கப்பட்டது. சமீபத்தில் தான் இந்த கமிட்டியின் கூட்டம் நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கார்த்தி கூறியதாவது நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசனம் சேர்ந்து நடிப்பதாக கூறியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடிகர் சங்கத்திற்காக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார் என கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் அத்துமீறல்களில் தொடர்பாக பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என கார்த்தி பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் புது கட்டிடத்தில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.