
ஹின்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் தொடர்புடைய அதானி குழுமத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுடைய லட்சக்கணக்கான கோடி ரூபாயை அதானி குழுமம் மோசடி செய்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் வருவாய் புலனாய்வு இருக்குனரகம், சிபிஐ அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆசியவற்றை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதோடு அதானி குழுமத்தின் நிறுவனங்களில் மக்கள் பணத்தை முதலீடு செய்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்.ஐ.சி ஆகியவற்றையும் மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க வேண்டும். குறிப்பாக இந்த விசாரணைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் மனுவில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து முறையிட்டையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே நிலுவையில் இருந்த மனுக்களுடன் இதனையும் இணைத்து பிப்ரவரி 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என தீர்ப்பளித்தது.