
ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் தற்போது குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி ஒரு சிறுவனை ஆளில்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் அவனை அவர் அடித்து துன்புறுத்தினார். இதைப்பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டிய நிலையில் சிறுவன் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறினான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்களை தனித்தனியாக அழைத்துச் சென்று இப்படி அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே ஒரு பலாத்கார வழக்கில் சிறைக்கு சென்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது கடந்த மாதம் 8-ம் தேதி குற்றப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றவாளிக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு இவரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் முக்கிய அம்சம் என்னவெனில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட 55 நாளில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தான்.