காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி ஒருவர் பல் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேறிய நிலையில் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து டாக்டரை கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.