
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இதைப் போன்று உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் பில் கேட்ஸ். இவர்கள் இருவருக்கும் இடையே பகை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதில் எலான் மஸ்க் அடிக்கடி பில்கேட்சை சீண்டுவார். தற்போது அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றுள்ளதால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மஸ்க் மீண்டும் பில்கேட்சை தன்னுடைய வார்த்தைகளால் சீண்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x பதிவில், டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க போகிறது. அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும் என்று பதிவிட்டுள்ளார். அதாவது டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக பில் கேட்ஸ் ஷார்ட் பொசிஷன் அதிகமாக வைத்துள்ளார். அதாவது பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி முதலீடு செய்வது தான் ஷார்ட் பொசிஷன். கடந்த 2022 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் டெஸ்லாவால் 1.5 கோடி பங்குகளை இழந்ததாக கூறி டெஸ்லாவின் பங்குகளை ஷார்ட் செய்தார். மேலும் இதிலிருந்து தான் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.