இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே மனிதர்களுக்கு தங்களிடம் எவ்வளவுதான் சொத்து மற்றும் பணம் இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும் மனம் என்பது அரிதுதான்.

மனிதர்கள் எல்லா விஷயங்களிலும் தனக்கு என்ன லாபம் இதை செய்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்று மட்டுமே சிந்திக்கும் சுயநலம் கொண்டவர்கள். ஆனால் இயற்கையில் மற்ற அனைத்து விஷயங்களும் கொடுக்கும் தன்மையுடன் இருக்கின்றன. இயற்கையின் கொடுக்கும் தன்மையை பறைசாற்றும் விதமாக தன்னிடம் இருக்கும் உரோமங்களை குருவிகள் கூடு கட்டுவதற்காக அர்ப்பணிக்கும் மான் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Birds Lover இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@birdslovers212)