ஐபிஎல் சீசனின் ஐந்தாவது போட்டியானது குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் குஜராத் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்து. கடைசியாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஒரு நபரோடு பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.