தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவ கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல், பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.