நைஜீரிய வீரர் குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கி ஆடுகளத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் ம்பங்க் என்பவரை நைஜீரிய வீரர் கேப்ரியல் எதிர்கொண்டுள்ளார். இந்த மோதலின்போது மூன்றாவது சுற்றில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று நைஜீரிய வீரர் கேப்ரியலுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கி வீரர் களத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.