நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.