தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் பொது மக்களை வீனஸ் மண்டபத்தில் சந்திக்கிறார். இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை விஜய் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி கொடுத்துள்ள நிலையில் குறிப்பிடப்பட்ட நபர்கள் மட்டும்தான் அங்கு வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டு விட்டார். இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறிவரும் நிலையில் விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கூறுகிறார்.

அவர் இன்று பரந்தூர் சென்று மக்களை சந்திப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இது தொடர்பாக தற்போது திமுக அமைப்புச் செயலாளர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பரந்தூர் விமான நிலையம் என்பது தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்படும் திட்டம். இதை பிற்காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றார். அதன்பிறகு விஜய் மக்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு யார் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. மக்கள் நலனும் நாட்டின் வளர்ச்சியும் தான் எங்களுக்கு முக்கியம். மேலும் இந்த திட்டத்தின் நலனை பிற்காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.