சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது .

இந்த ரயில்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாளையும் கடற்கரை தாம்பரம் இடையே செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது, எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.