பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை முன் பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. இந்த சம்பவமானது பல காலமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ரயில்வே அமைச்சர் மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ரயில்வே காவலர்களோடு இணைந்து இந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்