
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. இவர் ஒரு காலத்தில் ஹீரோயினாக ஜொலித்த நிலையில் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்பட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சினேகா நடிகர் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிகை சினேகா பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்துள்ளனர்.
அப்போது ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா இருவருக்கும் ஒரு கார் விபத்து ஏற்பட்டது. அதாவது இருவருக்கும் தனித்தனி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. நடிகை சினேகா காரில் சென்ற போது கார் விபத்துக்குள்ளான நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர் முதுகெலும்புகள் உடைந்து போகும் நிலையில் கார் கண்ணாடியை திறக்க முடியாமல் இருந்தார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் ஒரு கார் விபத்து ஏற்பட்டது. இதனால் இருவருமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அதன் பின் படங்களில் நடித்து முடித்தனர் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சினேகா பற்றி ஸ்ரீகாந்த் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.