
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமலா. இங்கு பாலத்தின் மீது ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து கழிவு நீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 51 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று நடந்த நிலையில் அந்த நாட்டு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாட்டில் தேசிய அவசர நிலையை ஜனாதிபதி பிறப்பித்ததோடு 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.