மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மரின் பல பகுதிகளை மட்டும் அல்லாமல், அதன் அண்டை நாடுகளான சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசத்திலும் உணரப்பட்டது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில், இடிந்த கட்டிடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

அதன்படி சீனாவின் யுன்னான் மாகாண மருத்துவமனையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, செவிலியர்கள் பச்சிளங்குழந்தைகளின் உயிரைக் காக்க தங்கள் உயிரையே பணயம் வைத்த காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த கட்டிடங்கள் நடுங்கும் போது  குழந்தைகளை கடினமாகத் தழுவி பாதுகாக்கும் இரு செவிலியர்களின் செயல், உலகம் முழுவதும் பாராட்டுகள் பெற்று வருகிறது. ஒரு குழந்தை பயந்து அழும் நிலையில், “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என தேற்றும் காட்சியும் மக்கள் மனங்களை தொட்டுள்ளது. “உண்மையான ஹீரோக்கள் இவர்கள் தான்” என நெட்டிசன்கள் புகழ்ந்து கொண்டனர்.