அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏப்ரல் 10 அன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயினில் இருந்து வந்த குடும்பம் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஹட்சன் நதிக்கு அருகே சுற்றுலா பயணமாக புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட சில நிமிடங்களில் ரோட்டர் பிளேடு உதிர்ந்ததில் கட்டுப்பாடின்றி நதியில் விழுந்தது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் இருந்தவர்களே. இதில், சியமென்ஸ் நிறுவத்தின் ஸ்பெயின் பிரிவின் தலைவர் ஆகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், மற்றும் ஹெலிகாப்டர் பைலட் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பகிரப்பட்டு வருவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விபத்து தொடர்பான விசாரணையை தற்போது அமெரிக்காவின் ‘Federal Aviation Administration’ மற்றும் ‘National Transportation Safety Board’ ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Truth Social-ல் இரங்கல் தெரிவித்ததோடு, போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். வானிலை சீராக இருந்த போதும், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கடுமையான இயந்திரக் கோளாறு காரணமாக பைலட்டின் கட்டுப்பாடைஹெலி  இழந்ததாக விமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர்க்க முடியாத ஒரு துயரமான விபத்தாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.