
சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில் ஏறினார். அவருக்கும் ஜெகனுக்கும் டிக்கெட் எடுப்பதில் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் டிக்கெட் கொடுக்கும் அந்த இயந்திரத்தை வைத்து கோவிந்தன் தலையில் ஜெகன் அடித்துள்ளார். இதில் கோவிந்தனுக்கு தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் மிகுந்த ஆத்திரம் கொண்டார்.
கோபத்தில் ஜெகனை சரமாரியாக அடித்தார். இதில் ஜெகன் பலத்த காயம் அடைந்த நிலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய நிலையில் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்துவிட்டார். கோவிந்தனுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பயணங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.