ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 29 பேர் வரை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்திற்கும் தற்போது உள்துறை மந்திரி அமைச்சர் அஞ்சலி செலுத்திய நிலையில் அனைவரது உடல்களும் சொந்த ஊருக்கு விமானம் மூலமாக அனுப்பப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போது தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டு இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று விளக்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.