
வெளிநாடுகளில் டேட்டிங் செல்வது சர்வ சாதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷியோ என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக டேட்டிங் சென்று வந்துள்ளார். இவர் 2000 டேட்டிங்குகளுக்கு மேல் சென்று அந்த அனுபவத்தை வைத்து தற்போது சொந்தமாக டேட்டிங் ஏஜென்சியை உருவாக்கியுள்ளார்.
அவர் சென்ற அனைத்து டேட்டிங்கும் தோல்வியில் முடிவடைந்ததால் தற்போது ஏஜென்சியை உருவாக்கியுள்ளார். யோஷியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது, இலவச ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை டேட்டிங் ஏஜென்சி மூலம் வழங்கி வருகிறார்.