அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இவர் ஆப்ரேஷனுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் 2 மாதங்கள் நலமுடன் இருந்தார்.

ஆனால் நேற்று திடீரென காலமானார். இதற்கு முன்னதாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட 2 நோயாளிகள் சில வாரங்களுக்கு பிறகு இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உடல் உறுப்புகள் செயலிழந்து உலகம் முழுவதும் பலர் தவிக்கும் நிலையில் விலங்கின் உறுப்புகளை பொருத்தி வெற்றி கண்டது புதிய நம்பிக்கையை அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.