
சீன நாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத்தள நிர்வாகம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நூதன முறையில் மோசடி செய்தது தற்போது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணம் உள்ளது. இங்கு புதிதாக செங்டு பனி என்ற ஒரு கிராமம் திறக்கப்பட்டது. அதாவது இந்த கிராமம் முழுவதும் பனியால் படர்ந்து இருக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் அதனை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றனர்.
ஆனால் அந்த இடத்தில் சோப்பு நரை மற்றும் பருத்தி போன்றவைகளை வைத்து பனி போன்று அலங்கரித்துள்ளனர். இது அங்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டதால் அந்த சுற்றுலா தளத்தை மூடினர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறும்போது நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியாததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.