மத்திய அரசினால் 2025 இல் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரை நடைமுறைகள் 2024 மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கடைசி தேதி வரும் செப்டம்பர் 15 ஆகும் என்று அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை தேசிய விருதுகள் தளமான http:/awards.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.