
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடந்தது அனைவரும் அறிந்தது தான்.
அதில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் மீது வந்த புகார்கள் குறித்து அவர்களிடமே விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன நிர்வாகிகளிடம் தேர்தல் முடிவு வெளியான பிறகு பலரது பதவிகள் பறிக்கப்படும் என அவர் ஷாக் கொடுத்திருக்கிறார்.