
உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்போர்ட்ஸ் டே நடப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனால் பள்ளியின் பி.டி மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் டே பயிற்சிக்காக 14 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் அந்த பி.டி மாஸ்டர் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல்நிலம் பாதிக்கப்பட்டடுள்ளது. இருப்பிலும் சிறுமி யாரிடமும் இதைப்பற்றி கூறாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இச்சம்பவத்தை பற்றி அறியாத பெற்றோர் அந்த சிறுமியை அவரது அத்தை ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஊருக்கு சென்ற சிறுமிக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி அவரது அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
அதன்பின் சிறுமியின் அத்தை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். இதற்கிடையே பி.டி மாஸ்டர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து இதைப்பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என ரூ.30,000 கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் நலம் மிகவும் மோசமாகி போனதால் அவரது பெற்றோர் பி.டி மாஸ்டரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை பற்றி தகவல் அறிந்த பி.டி மாஸ்டர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலம் கடந்த 20 நாட்களாக மோசமான நிலையில் இருந்து வந்துள்ளது. இதனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் பி.டி மாஸ்டரை தேடி வருகின்றனர்.-