
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஸ்டீவன் மேன்கிங் என்பவர், வால்ஸ்ட்ரீட்டில் பங்கு வர்த்தகராக வேலை பார்த்து வந்தார். ஆனால் பணியின் அழுத்தம் மற்றும் நீண்ட நேர வேலை காரணமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி போய்விட்டதாக உணர்ந்த அவர், 2014 ஆம் ஆண்டு தன்னிச்சையாக வேலையை விட்டு விட்டு, கல்வித் துறையில் தனியாக செயல்படத் தீர்மானித்தார்.
தற்போது டியூஷன் ஆசிரியராக, ஒரு மணி நேரத்திற்கு சுமார் ₹86,800 வரை சம்பாதித்து வருகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. தன் பயணத்தை ஒரு மணி நேரத்திற்கு $50 கட்டணத்தில் தொடங்கிய ஸ்டீவன், பின்னர் Wyzant போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, தனது சேவைக்கு விலையுயர்த்தும் வாய்ப்புகளை உருவாக்கினார்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, இன்று அவர் சுமார் 20-25 மணி நேரம் ஒரு வாரத்தில் பணியாற்றி, சிறப்பான வருமானம் ஈட்டுகிறார். ஸ்டீவன் கூறுகையில், “நான் ஒரு பங்குவர்த்தகர் என்பதால் அதே துறையில்தான் வேலை தேடவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, எனது மனம் சொல்வதைத்தான் தேர்வு செய்தேன்.
பணத்தை மட்டும் நோக்கி ஓடாமல், உண்மையில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் வேலைதான் வாழ்க்கையை முழுமையாக்கும்” என தெரிவித்துள்ளார். இன்று அவர் வீட்டிலிருந்து வேலை செய்து, தனக்கு விருப்பமான நேரத்தில் பணியாற்றி, ஒரு ஆழமான ஆனந்தத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.