இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் நம்முடைய போனில் டேட்டா தீர்ந்து விட்ட சூழ்நிலைகளில் அவசர சேவைகளை பயன்படுத்த ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எமர்ஜென்சி வேலிடிட்டி லோன் வசதியை கொண்டு வந்துள்ளது.

அதன்படி போனில் *567*2# என்று டயல் செய்வதன் மூலம் சந்தாதாரர்கள் 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாடு முழுவதும் வரம்பற்ற அழைப்பை ஒரு நாள் ரீசார்ஜ் இல்லாமல் பெற முடியும். அவசர நேரத்தில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது வசூலிக்கப்படும். எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்