சமீப காலமாகவே சினிமா என்றாலே பட வாய்ப்புக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் பேச்சு தான் அதிகம் வருகிறது .சமீபத்தில் கூட அர்ஜுன் ரெட்டி படப்புகழ் நடிகை ஷாலினி பாண்டே ஒரு பேட்டியில் நான் உடைமாற்றம் போது கேரவனுக்குள் திடீரென்று இயக்குனர் ஒருவர் உள்ளே நுழைத்துவிட்டார். ஆனால் அவரை திட்டிவிட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகை மிருணாளினி ரவியிடம் கேட்கப்பட்டதற்கு,   எனக்கு எந்த தொந்தரவும் வராமல் நானே பார்த்துக்கொள்கிறேன்.

எல்லாமே நம்ம கையில்தான் இருக்கிறது. நாம இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும். அதில் நாம் நிறைவாக இருந்தால் அல்லது போதும் என்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது” என்று பேசுகிறார்.