
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் இரவு நேர சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் ஹிண்டன் பாலம் அருகே சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நசீமுதீன் என்பவரை போலீசார் நிறுத்திய போது அவர் தப்பிக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்தது. பின்னர் ஓடத் தொடங்கிய நசீமுதீனை துரத்திய போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போலீசார் நடத்திய பதிலடி சூட்டில் நசீமுதீன் காலில் சுடப்பட்டு காயமடைந்தார். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், நசீமுதீன் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குலாவ்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகவும், அதைப் பயன்படுத்தி காஜியாபாத், நொய்டா, டெல்லி பகுதிகளில் சங்கிலி மற்றும் மொபைல் பறிப்பு, கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
दिल्ली में 20 अप्रैल को सरेआम लूटपाट करने वाले नसीमुद्दीन को गाजियाबाद (UP) पुलिस ने टांग में गोली मारकर पकड़ा है। नसीमुद्दीन पर यूपी और दिल्ली में करीब 40 मुकदमे दर्ज हैं। दूसरे लुटेरे की तलाश जारी है। pic.twitter.com/llHiBxPJWY
— Sachin Gupta (@SachinGuptaUP) May 11, 2025
கைது செய்யப்பட்ட நசீமுதீன் எனப்படும் பத்தா மீது ஹப்பூர், மீரட் மற்றும் டெல்லி NCR பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் கொள்ளை முயற்சி, ஆயுதச் சட்டம் மற்றும் கொலை முயற்சி தொடர்பான வழக்குகளும் அடங்கும். தற்போது போலீசார் அவரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய மற்ற குற்றச்செயல்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர் சமீபத்தில் டெல்லியில் பட்ட பகலில் ஒருவரிடம் கொள்ளையடித்த நிலையில் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம், காவல்துறையின் நேரடி நடவடிக்கையின் மூலம் ஒரு தீவிர குற்றவாளி கைது செய்யப்பட்ட முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.