உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கத்தீட்ரல் கல்லூரி மைதானத்தில், ஒரு இளைஞரை இருவர் கம்பிகளால் அடித்து கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த இளைஞர் கீழே விழுந்த பிறகும், மீண்டும் மீண்டும் அடிக்கப்படுகிறார். சுமார் 12 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம், சமீபத்தில் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

 

இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஜான்ஸி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின் அடிப்படையில், பிரேம்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.