உத்திரபிரதேச மாநிலத்தில் முராதாபாத் மாவட்டத்தில் தகுர் வாடா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் வீட்டின் அருகே இன்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே ரக்ஷித் என்ற வாலிபர் காரில் வந்தார். அவர் திடீரென காரை நிறுத்தி சிறுமியை கடத்தி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் ரக்ஷித் காரில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு ரக்ஷித் தங்கி இருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமி கடத்தப்பட்ட நேரத்தில் பெற்றோர் வீட்டில் இல்லை. அந்த சிறுமியின் தாய் தந்தை இருவரும் கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் தான் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.