கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பகுதியில் ராஜீவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆதிரா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ராஜீவ் பரணிக்காடு‌ பகவதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜீவ் சம்பவ நாளில் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்ட நிலையில் அவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பட்ட பகலில் வீட்டுக்குள் நுழைந்த யாரோ சிலர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் ஆதிரா பழகி வந்தது தெரிய வந்தது. அந்த வாலிபர் தான் கொலை நடந்த தினத்தில் ஆதிரா வீட்டிற்கு வந்துவிட்டு சென்றுள்ளார். அதோடு அந்த வாலிபர் ஆதிராவின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். அந்த வாகனம் ஒரு ரயில்வே நிலையத்தில் நின்றது. அந்த வாலிபர் தான் ஆதிராவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். மேலும் அக்கம் பக்கத்தில் கூட சந்தேகம் வராத அளவுக்கு சத்தமே இல்லாமல் பட்டபகலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.