நாக்பூரில் உள்ள குர்த் பகுதியில் சந்திரசென் ராம்தேகே (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி திஷா (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் சந்திரசென் கடந்த 2 வருடங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படுத்த படுக்கையானார். கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி திஷா அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

உடல் நலக்குறைவினால் தன் கணவன் இறந்து விட்டதாக திஷா கதறி அழுத நிலையில் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் அவரது மனைவியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்தது. அதாவது கணவன் படுத்த படுக்கையாக மாறியதால் குடும்பத்தை நடத்துவதற்காக திஷா தண்ணீர் கேன் போடும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ராஜபாபு டைர்வாலா (28) என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் தண்ணீர் கேன் போட சொல்லும்போதெல்லாம் திஷா அந்த வாலிபருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனுக்கு அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் தொடர்ந்து தன் மனைவியிடம் அது பற்றி கேட்டுள்ளார். இருப்பினும் திஷா தன் கணவனிடம் எதுவும் கூறாமல் வாலிபருடன் தினசரி உல்லாசமாக இருந்த நிலையில் ஒருநாள் உல்லாசமாக இருந்து விட்டு தாமதமாக வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படவே, அப்போதுதான் கள்ளக்காதல் விவகாரம் அவரது கணவனுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அவரது கணவர் கண்டித்ததால் தன் கணவனை திஷா கொலை செய்ய முடிவு செய்து தன் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடல் நலக் குறைவினால் இறந்து விட்டதாக அவர்கள் அழுது நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரையும் தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.