
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை ஒழுங்காக வழிநடத்தி செல்லாமல் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. இதுஒருபுறமிருக்க பாஜவுடனான கூட்டணி வைக்காமல் தனித்து நின்றதும் தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் ஏற்பார்களா? குறிப்பாக, ஒற்றைத் தலைமையாக உள்ள இபிஎஸ், மனம் மாறிச் செல்வாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.