
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த 70 வயது மூதாட்டியான ராணி என்பவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நிலையில் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு 12ஆம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படித்து தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் 346 மார்க் எடுத்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் அதிகபட்சமாக 89 மார்க் எடுத்த நிலையில், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும், வரலாறில் 52 மதிப்பெண்களும் என மொத்தமாக 346 மார்க் எடுத்துள்ளார்.