ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் க்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலில் கூடுதலாக ஒரு சதவீதம் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், கூடுதல் கொழுப்பு மற்றும் புரதம் சேர்ப்பதை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர், ஆரோக்கியமான தமிழகம் என்ற அடிப்படையில் ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்