குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதைப்பூர் பகுதியில் சாலையோர உணவகம் இருந்தது. அங்கு இரவு நேரம் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யுவி கார் உணவகத்திற்குள் நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

மோதுவதற்கு முன்பாக ஒரு நபர் எழுந்து தப்பிக்க முயற்சி செய்யும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விபத்தில் மூன்று பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது